கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு வருகிற மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை பரபரப்பாக கல்வி வேலை என பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த மக்களை, நிதானமாக அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு நேரம் வழங்கியுள்ளது.
இதன் காரணமாக பலரும் தங்களுக்கு பிடித்த படங்களை பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது என இனிமையாக நேரம் செலவிட்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் நம் வாழ்க்கை முறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தினால் பலரும் தங்கள் உடல் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
மேலும் பிரபலங்கள் பலரும் டிக்டாக் வீடியோ செய்வது, டான்ஸ் வீடியோக்களை பகிர்வது என வித்தியாசமாக தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் அர்ணால்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த ஊரடங்கு நம்மை எல்லாம் வித்தியாசமான செயல்களை செய்ய வைத்து விட்டது. இது சீரியஸான பிஸ்னஸ் மீட்டிங'' என்று தங்கள் முகங்களை கார்டூன் இமேஜாக மாற்றி வீடியோ கால் பேசும் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.
Quarantine makes us all do weird things. This was a serious business meeting today. pic.twitter.com/BFeBhdpAnP
— Arnold (@Schwarzenegger) April 17, 2020