''RAPE செய்யப்பட்டேன் '' - அதிர்ச்சிகரமான தகவல் சொன்ன பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அர்ஜூன் ரெட்டி'யில் விஜய் தேவரகொண்டாவின் நண்பராக தனது யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் ராகுல்  ராமகிருஷ்ணா. பின்பு  'கீதா கோவிந்தம்', 'அல வைக்குந்தபுரமுலோ' உள்ளிட்ட படங்களில்  நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Arjun Reddy Fame Rahul Ramakrishan shares about being raped during Childhood

இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''நான் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன். இதற்கு மேல் என் துக்கத்தை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. உங்களுடைய ஆதரவிற்கு நன்றி.

உங்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு எதாவது மாற்றம் தென்பட்டால் சற்று கவனியுங்கள். அவர்கள் நிகழ்ந்ததை வெளியில் சொல்வதற்கு போதுமான ஆற்றல் இருக்காது''. என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

Arjun Reddy Fame Rahul Ramakrishan shares about being raped during Childhood

People looking for online information on Ala Vaikunthapurramloo, Rahul Ramakrishna will find this news story useful.