www.garudavega.com

இந்த 'பிரச்சினை' முடியட்டும் வச்சுக்கறேன்... 'ஸ்கெட்ச்' போட்டு காத்திருக்கும் அர்ச்சனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரே ஒரு போன் கால் பேசுனதுக்கு என்ன இப்படி வச்சு செஞ்சுட்டாங்களே என, ரியோ நினைத்திருக்க கூடும். அந்தளவுக்கு சனம், அனிதா, ரம்யா, சம்யுக்தா, ஷிவானி என பாரபட்சம் பார்க்காமல் அவரை வச்சு செய்து விட்டனர். இடையில் அர்ச்சனா புகுந்தாலும் கூட டேமேஜ் கண்ட்ரோலை தவிர்க்க முடியவில்லை. வீட்டுக்குள் பிரச்சினைகள் நான்ஸ்டாப்பாக போய்க்கொண்டு இருந்தது.

Archana's next target Sanam Shetty? Twitter reacts

அப்போது வீட்டுக்கு வெளியே அர்ச்சனா-நிஷா இருவரும் கூடி ஆலோசனை நடத்தினர். அர்ச்சனா, '' டாப்பிள் கார்டு டாஸ்க்கின் போது சனம் என்னை நாமினேட் பண்ணி இருக்கா. எனக்கு டைட்டில் வேணாம்னு நான் 2 வாரத்துக்கு முன்னால அவகிட்ட சொன்னேன் சொல்லி இருக்கா. இந்த டெலிகாலர் டாஸ்க் முடியட்டும். அவளுக்கு வச்சுக்கறேன்,'' என நிஷாவிடம் தெரிவித்தார்.

இடையில் அவர் பேசிய வார்த்தை ஒன்றும் மியூட் ஆனது. இதையடுத்து இருவரும் ஷிவானி-பாலாஜி இருவரையும் இமிடேட் செய்து கிண்டலடித்து மகிழ்ந்தனர். மேலும் இருவருக்கும் இடையில் சென்றும் கலாய்த்து விட்டனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவோட அடுத்த டார்கெட் சனம் தான். என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Archana's next target Sanam Shetty? Twitter reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.