அர்ச்சனாவை தேவையில்லாமல் கேள்வி கேட்ட ரசிகர்... அவங்க என்ன சொல்லி இருக்காங்க பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸுக்கு பிறகும் வாழ்க்கை என்பது ஒன்று இருக்கிறது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஆரி டைட்டிலை ஜெயித்திருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. அதன்பிறகு அவர் ஒரு முக்கியமான போட்டியாளராக மாறிவிட்டார் என்று சொல்லலாம். அவர் மீது சில போட்டியாளர்களால் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், போட்டி என்று வந்துவிட்டால் அவர் புலியாக மாறி விடுவார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகும் அர்ச்சனா போட்டியாளர்களுடன் மகிழ்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் இன்றைய தினம் ரியோ மற்றும் அவரது மனைவி தங்கள்  திருமண தினத்தை கொண்டாடுகின்றனர்.

archana reply to aari fan question அர்ச்சனாவை கேள்வி கேட்ட ஆரி ரசிகர்

எனவே அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியிருந்த அர்ச்சனாவிடம் ரசிகர் ஒருவர் "நீங்க ஏன் ஆரியுடன் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லை. உங்கள் குடும்பமாக ஏன் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை" என்பது போன்ற கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள அர்ச்சனா "உண்மையிலேயே எனக்கு அவருடன் எந்த புகைப்படமும் இல்லை. பைனல்ஸ் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விஜய் டிவி நிறுவனத்திடம் இருக்கிறது. அதை எங்களால் தற்சமயம் பயன்படுத்த முடியாது. பிக்பாஸ் கொண்டாட்டத்தின்போது எங்களுக்கு அதிக போட்டோ எடுக்கும் அளவுக்கு நேரமில்லை. எனக்கு அவருடன் புகைப்படம் எதுவும் இல்லை. வேறு எப்போதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்கள் புகைப்படம் எடுப்போம். அதேபோலஆரியிடமும் இப்படி புகைப்படம்  எடுக்க சொல்லுங்கள். அப்பொழுதுதான் அவரது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியும். அதேபோல் அவரிடமும் என்னுடன் எந்த புகைப்படமும் இல்லை இப்போ என்ன பண்ணலாம். இந்த இந்த மெசேஜ் இருக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

archana reply to aari fan question அர்ச்சனாவை கேள்வி கேட்ட ஆரி ரசிகர்

Tags : Aari

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Archana reply to aari fan question அர்ச்சனாவை கேள்வி கேட்ட ஆரி ரசிகர்

People looking for online information on Aari will find this news story useful.