பிக்பாஸ் எனும் புதுமையான டெலிவிஷன் நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இந்தியாவிலும் பலமொழிகளில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறு சீசன் ஆக நடந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒற்றை அதிகார குரல் அனைவரையும் வழி நடத்தும். வெவ்வேறு கருத்துக்கள், சிந்தனைகள், நிலைப்பாடுகள் உள்ள பலவிதமான சமூகப் பிரதிநிதிகளாக திகழும் போட்டியாளர்கள் கருத்தியல் ரீதியாகவும், உடல் மற்றும் மூளை பல ரீதியிலும் தங்களுடைய வலிமையை நிரூபித்து 100 நாட்களுக்கு மேல் யார் அந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்கள் இந்த போட்டியில் ஜெயிக்கிறார்கள்.
உலக திரைப்படங்களில் பார்க்கக்கூடிய சென்சேஷனல் கேம்கள் மற்றும் விளையாட்டுகள் தான் இந்த போட்டிகளிலும் நம்மால் பார்க்க முடியும். இதில் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள், வாக்குவாதங்கள் வருவது சகஜம்தான். இதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. டாஸ்குகளில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சேர்ந்து ஈடுபடும் போது இவை ஏற்படுகின்றன. ஒருவர் சிந்தனை அல்லது நிலைப்பாடு இன்னொருவருக்கு மாற்றாக தெரிவது, ஒருவர் பேசுவது இன்னொருவர் தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பது, இன்னும் பலர் வேண்டுமென்றே இன்னொருவரை சீண்டுவது, அதனால் ஈகோ விளைவது என இதற்கான காரணப்பட்டியில் நீள்கிறது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் தமிழ் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கூட சண்டை வேண்டாம் என்று ஜனனி பிக் பாஸ் வீட்டில் கதறி அழுவதை காணமுடிந்தது. பிக்பாஸ் வீட்டில் தொடர்ச்சியான வாதங்கள் மற்றும் சண்டைகளால் விரக்தி நிலைக்கு சென்ற ஜனனியின் ரியாக்ஷனே இது. இப்படி வாதங்கள், சண்டைகளைத் தாண்டி அவ்வப்போதும் அடிதடியும் இந்த நிகழ்ச்சியில் நடப்பதுண்டு. பெரும்பாலும் டாஸ்குகளில் தெரியாமல் ஏற்படும் தள்ளுமுள்ளு தீவிர நிலைக்கு சென்று அடிதடியாக மாறும். அது டாஸ்குக்குள்ளேயே அமையும். அப்படி ஒரு சம்பவத்தை கடந்த சீசனில் தாமரை மற்றும் பிரியங்கா இடையே பார்க்க முடிந்தது.
இந்த 6வது சீசனிலும் தனலட்சுமியை அசீம் அவ்வாறு டால் டாஸ்கில் தள்ளிவிட்டிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹிந்தி வெர்ஷனில், அதாவது பிக்பாஸ் இந்தி 16வது சீசனில் ஒரு படி மேலே போய் பெர்சனலாக அடிதடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம், இந்தியில் பிக்பாஸ் 16வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர் ஒருவர், சக ஆண் போட்டியாளரை கழுத்தை பிடித்து தாக்கி இருக்கும் சம்பவம்தான் பெரும் பரபரப்பை இந்திய அளவிலான பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் போட்டியாளர் ஷிவ் தாக்கரே, போட்டியாளர் அர்ச்சனா கௌதமை கோபமூட்டும் வகையில், அவருடைய சுய ரூபத்தை சீண்டும் வகையில் அதிகமாக பேசியதாக ஒரு சாரர் குறிப்பிட்டு வருகின்றனர். இன்னொரு சாரர் ஷிவ் தாக்கரே பேசும் பொழுது கோபமடைந்து அர்ச்சனா கௌதம், அவரை அடித்தது தவறும் என்றும் அதேபோல் தவறுதலான கருத்துக்களை அர்ச்சனா கௌதம் பேசியதாகவும் குறிப்பிடுகின்றனர். பிறகு அர்ச்சனா கௌதம்க்கு போட்டியாளர்கள் அவர் செய்ததது என அறிவுறுத்தியது, பிக்பாஸ் அவரை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பேசுவதும், இன்னொரு வாய்ப்பு கொடுங்கள், என பிக்பாஸ் வீட்டுக்குள் நீடிக்க வேண்டும் என அர்ச்சனா கோருவதும் உள்ளிட்ட வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன.
இதனிடையே அடி வாங்கிய ஷிவ் தாக்கரே, காயப்பட்டதன் காரணமாக மருத்துவ முதலுதவி மேற்கொண்டுள்ளதாகவும், அடித்த போட்டியாளர் அர்ச்சனா கௌதம்க்கு, ரெக்கார்டு கொடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் சல்மான் கான் நேரடியாக வந்து சொல்லும்போது தான் தெரியும் என்கிற நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படும் போட்டியாளர் அர்ச்சனா கௌதமை திரும்பவும் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் என்கிற #BringBackArchana ஹேஷ் டேகை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதேபோல் ஷிவ் தாக்கரே பேசியதில் தவறில்லை என்று பலர் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இந்திய அளவில் பலரும் பார்க்கக் கூடிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி அடிதடி நிகழ்ந்திருக்க கூடிய சம்பவம் அனைத்து மொழி பிக் பாஸ் ரசிகர்களுக்கும் மத்தியிலும் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.