பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிஷா தனது கலகலப்பான பேச்சினாலும், டைமிங் காமெடிகளாலும் மக்கள் மனதை பிடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாட்டி டாஸ்க்கிலும் அவர் ரியோ உடன் சேர்ந்து செய்த சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தன.
இந்நிலையில் நிஷாவின் கணவர் ரியாஸ் தற்போது பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "நிஷாவுக்கு இரக்க சுபாவம் அதிகம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமா என்று தான் பயமாக இருக்கிறது. நிஷா இதுவரை நிஷாவாகவே தான் இருக்கிறார். அவர் விளையாட்டை விளையாடவில்லை. அவர் ரியோ, ரமேஷ், அர்ச்சனா, சோமுடன் சேர்ந்து கொஞ்சம் பின்தங்கி இருப்பது எனக்கு ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது. மேலும் அவரை அடிக்கடி நைட்டி அணிய வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர் நைட்டி அணிவது தான் எனக்கு பிடிக்காத விஷயம்(சிரித்துக்கொண்டே). மற்றபடி நிஷா நிஷா மற்றவர்களுக்கு உதவி செய்வது முதல் அனைத்தும் சிறப்பாக தான் செய்து கொண்டிருக்கிறார்"என்று கூறியுள்ளார்.