ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவைத் தொடர்ந்து நேற்றைய தினம் அதாவது மே-2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, திமுக முன்னிலையில் இருந்த நிலையில், இறுதியில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தத்தம் தொகுதிகளில் அபாரமாக வெற்றி பெற்றனர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றி மு.க.ஸ்டாலினுக்கு இந்த வெற்றி வரலாறு காணாத வெற்றியாகியுள்ளது. முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஸ்டாலினின் இந்த வெற்றிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) May 3, 2021
இதுபற்றிய தமது ட்வீட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் "சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும். https://t.co/m0urghBjVr
— M.K.Stalin (@mkstalin) May 3, 2021
ரஹ்மானின் வாழ்த்தை ஏற்று பதில் அளித்த திமுக் தலைவர் மு.க.ஸ்டாலின், “இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி! வெற்றி பெற்றதும் முதல் 'பேட்டியில்' சொன்னது என்ன தெரியுமா?!