சென்னை: கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | Breaking: "கழகத் தலைவன்" - உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பட டைட்டில் இதுவா..? பரபரப்பு அப்டேட்.
பொன்னியின் செல்வன் ரிலீஸ்
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப்பேரரசின் பொற்காலம்
சோழப்பேரரசின் பொற்காலம் துவங்கும் காலக்கட்டத்தை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து திரைக்குக் கொண்டு வரவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் இயக்குநர் மணிரத்னம், இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு
இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்தை பாஸ் என்று அழைத்தார். அதன் பின் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “30 வருடமாக எனக்கு இவர் தான் பாஸ்.. நான் கற்றுக் கொண்ட வித்தைகள், வாழ்க்கையில் எப்படி சோம்பேறித்தனத்தை தாண்டி உயர்வடை வேண்டும் என்பதையெல்லாம் இவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
எளிய மனிதர்களிடம் இருக்கிற அதிக திறமைகளை எப்படி வெளியே எடுப்பது என்பதை இவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். என்னிடம் வரும் பாடகர்களை எப்படி நன்றாக பாட வைத்தீர்கள் என்று கேட்பார்கள்.. அதெல்லாம் இவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இவருடைய பொறுமை.. மனிதநேயம்.. ஊக்கம்.. அன்பு அனைத்தும் தான் காரணம்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் உங்க படம் குடும்ப படம். இவ்ளோ பெரிய திரைப்படத்தை தொடங்கினார். எவ்வளவோ வழியில் இந்த படத்துக்கு இசையமைக்க யோசித்தோம். ஆய்வுக்காக பாலி சென்றோம். அங்கு ஒரு ஒரு வாரம் இருந்தோம். புதிய கருவிகளை வாங்கி அங்கிருக்கும் கோயில்களுக்கு சென்று ஆய்வு செய்தோம், திரும்பி வந்தோம். ஆனால் அதற்குள் லாக்டவுன் வந்துவிட்டது.
லாக்டவுனில் இவ்வளவு பெரிய டீம், உயிரை பணைய வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை எடுத்ததற்கு உங்களுக்கு எல்லாம் சல்யூட். கொரோனாவில் நாம் நிறைய பேரை இழந்திருக்கிறோம். எல்லாம் மீறி இந்த வயதில் சென்று இந்த திரைப்படத்தில் பணி புரிந்ததற்கு அனைவருக்கும் சல்யூட். அனைவருக்கும் என்னுடைய இசை திரைப்படத்தில் பிடிக்கும் என்று நம்புகிறேன் எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம்! நன்றி” என்றார்.
Also Read | "சோழர் குலத்தின் மணி விளக்கு .." - PS-1 பட விழாவில் திரிஷாவுக்கு கார்த்தி கொடுத்த மாஸ் Intro