இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான்.
Also Read | BP 190-ஆ?? மயங்கி விழுந்த அசீம்.. தூக்கிக் கொண்டு ஓடிய போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு? Bigg Boss
தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய முக்கிய படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.
இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஹ்மான் இயக்கிய லீ மஸ்க் படத்தை பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். "இரண்டு அற்புதமான மனிதர்கள் சந்திப்புக்கு நீங்கள் காரணமாக இருப்பது மிகப் பெரிய ஆசிர்வாதம்." என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | உலகப்புகழ் பெற்ற கடற்கரையில் அம்மா அப்பாவுடன் மாளவிகா மோகனன்.. வைரல் ஃபோட்டோஸ்