ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான மூப்பில்லா தமிழே தாயே பாடல் இன்று வெளியாகி உள்ளது.
மாலத்தீவில் கடைசி நாள்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செம HOT திவ்யபாரதி!
இசைப்புயல்..
1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானதில் இருந்தே அவர் பல ரசிகர்களை தனது இசையால் மயக்கிவிட்டார்.கடந்த 30 வருடங்களில் இசையில் அவர் புரிந்த சாதனகளும் பல.
எல்லா புகழும் இறைவனுக்கே..
குறிப்பாக 2008 ஆண்டு வெளிவந்த “ஸ்லம்டாக் மில்லினியர்” திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது நாம் எல்லோரும் அறிந்ததே.மேலும் ஆஸ்கர் வழங்கிய விழாவில் தனது தாய் மொழி தமிழில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என கூறியது தமிழர்களை புல்லரிக்கவைத்தது.
30 ஆண்டுகள்….
ஏ.ஆர்.ரகுமான் திரையுலகத்திற்கு இசையமைக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. மணிரத்னம்,கௌதம் வாசுதேவ் மேனன், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களோடு தற்போதும் பணி புரிந்து வருகிறார்.
இந்திய இசையமைப்பாளர்..
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமன்றி தென்னிந்திய மொழிகளான தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.மேலும் பாலிவுட் என அறியப்படும் ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
உலகளாவிய இசையமைப்பாளர்…
ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் மட்டுமன்றி உலகளாவிய திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஈரான், ஆங்கில மொழி திரைப்படங்களுக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வெல் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவர் இசையமைத்த இசை உலகளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
வெளிவரவிருக்கும் படங்கள்..
தமிழில் தற்போது விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்,கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு, சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன், சிலம்பரசன் நடிக்கும் பத்து தல, பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அதே போல் மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம், ஃபகத் ஃபாசில் நடிக்கும் மலையன் குஞ்சு ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
மாஜா நிறுவனம்..
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மாஜா நிறுவனம் சார்பில் பல சுயாதீன இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், தீ-ன் குரலில் வெளிவந்து சக்கை போடு போட்ட எஞ்சாயி எஞ்சாமி பாடல் மாஜாவில் தான் வெளிவந்தது.
மூப்பில்லா தமிழே தாயே..
இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று கவிஞர் தாமரை வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “மூப்பில்லா தமிழே தாயே” என்ற பாடலின் ப்ரோமோ மாஜா யூட்யூப் சேன்னலில் வெளியானது.அதை தொடர்ந்து ரசிகர்கள் அப்பாடல் எப்போது வெளிவரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து 5 நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான “மூப்பில்லா தமிழே தாயே பாடல்” மார்ச் 25 ஆம் தேதி வெளிவரும் என மாஜா யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியானது.இந்நிலையில் இன்று “மூப்பில்லா தாயே தமிழே” பாடல் வெளியாகி உள்ளது.
கட்சி ஆரம்பிக்கும் கிங்ஸ்லீ??பேயை தொண்டராக சேர்க்க முடிவு..வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக்