பிரபல பின்னணி பாடகரான கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத், தனது 53 ஆவது வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read | அதிர்ச்சி.! 'காக்க காக்க' முதல் 'தி லெஜண்ட்' வரை.. பிரபல பாடகர் KK மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில், எக்கச்சக்க பாடல்களை பாடி பிரபலம் ஆனவர் பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் கிருஷ்ணகுமார் குன்னத் (KK).
KK பாடியுள்ள பல பாடல்கள், காலங்கள் கடந்து இன்னும் மக்கள் மத்தியில் பேவரைட் பிளேலிஸ்ட்டில் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால் மக்களை கட்டிப் போட்டு வந்த கேகே, நேற்று நள்ளிரவு திடீரென உயிரிழந்துள்ளார்.
இசை நிகழ்ச்சியில் KK
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேகேவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மாரடைப்பின் காரணமாக கேகே உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழில் பல ஹிட் பாடல்கள்
53 வயதே ஆகும் கேகே, தமிழில், Strawberry கண்ணே, உயிரின் உயிரே, காதல் வளர்த்தேன், அப்படி போடு போடு, காதலிக்கும் ஆசை இல்லை, ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கேகே பாடி இருந்த Strawberry கண்ணே தான், அவரின் முதல் தமிழ் பாடலாகும்.
சமீபத்தில் சரவணன் நடிப்பில், தி லெஜண்ட் படத்தில் இருந்து வெளியான பாடல்களில், 2 பாடல்களையும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடி இருந்தார் கிருஷ்ணகுமார் குன்னத். அப்படி இருக்கும் நிலையில், கிருஷ்ணகுமார் குன்னத்தின் உயிர் பிரிந்துள்ள சம்பவம், ஏராளமானோரை கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமல்ஹாசன், அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள், கேகே மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான்
அந்த வகையில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கேகேவிற்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ரஹ்மானின் ட்வீட்டில், "டியர் KK. இப்போது என்ன அவசரம் Buddy. உங்களை போன்ற திறமையான பாடகர்களும், கலைஞர்களும் இந்த வாழ்க்கையை இன்னும் தாங்கிக் கொள்ளக் கூடியதாக மாற்றினீர்கள்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "என்னோட உயிரின் உயிரே பிரிஞ்சிடுச்சு.." பிரபல பாடகர் மறைவால் உடைந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்