பிரான்சில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படம், திரையிடப்படவுள்ளது பற்றி அசத்தலான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், கடந்த 30 ஆண்டுகளாக ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னுடைய இசையால் ராஜ்ஜியம் செய்து வருகிறார்.
கதை இசைப் புயலோடது..
ஆஸ்கர் விருதுகளையும் வென்றிருந்த ஏ.ஆர். ரஹ்மான், இசை என்பதைத் தாண்டி, '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம் மூலம், எழுத்தாளராகவும் அறிமுகமாகி இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும், 99 சாங்ஸ் படத்திற்கு, இசையமைத்து தயாரிக்கவும் செய்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.
ரஹ்மான் டைரக்ஷனில் லி மஸ்க்
இதனைத் தொடர்ந்து, இசை, கதை என்பதைத் தாண்டி, இயக்குனர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். 'லி மஸ்க்' என்னும் 36 நிமிடம் ஓடக் கூடிய திரைப்படம் ஒன்றை ரஹ்மான் இயக்கி உள்ளார். தனது மனைவியின் ஒன் லைனில் இருந்து ரஹ்மான் இந்த ஐடியாவை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், லி மஸ்க் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நோரா அரனிசாண்டர், கை பர்னெட் ஆகியோர் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த மாதம் நடைபெறவிருக்க கூடிய கேன்ஸ் திரைப்பட விழாவில், லி மஸ்க் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இது குறித்த பதிவை, ஏ.ஆர். ரஹ்மான், தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8