இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான்.
Images are subject to © copyright to their respective owners.
தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.
Images are subject to © copyright to their respective owners.
சமீபத்தில் வெளியான படங்களான மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.
இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் சயத் தர்ஹாவின் சந்தனக் கூடு விழாவின் கொடியேற்றத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கொடியேற்றத்தில் பங்கு கொண்டு தர்ஹாவில் வழிபாடு செய்தார்.