www.garudavega.com

டிசம்பர் 31 நம் புத்தாண்டு கிடையாது.. “இதுதான் நம்ம கலாச்சாரம்!” - நமீதா பரபரப்பு வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரையுலகில் மிக பிரபல நடிகை நமீதா.  பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நமிதா, தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தில் பிரபலமாகி, பின்னர் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

April 14 is our new year actress namitha Video Tamil New Year

‘மச்சான்’ என்று செல்லமாக ரசிகர்களை அழைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கலக்கினார். அதன் பின் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமது காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் திருமணத்திற்கு பிறகு அரசியல் ஈடுபாட்டுடன் இயங்கி வந்த இவருக்கு கடந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

தற்போது பாஜக செயற்குழு உறுப்பினராக திகழ்ந்து வரு நடிகை நமீதா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், “டிசம்பர் 31ஆம் தேதி நமது புத்தாண்டு கிடையாது; ஏப்ரல் 14 ஆம் தேதிதான் தமிழ் புத்தாண்டு, அதுதான் நமது புத்தாண்டு” என்று பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக நமீதா வெளியிட்டுள்ள வீடியோவில், “ஏப்ரல் 14 மிகவும் அருகாமையில் உள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அதை கொண்டாடுங்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்லுங்கள். கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதன்பிறகு பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதன்பிறகு முழு நாளையும் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள். அதுதான் நம் கலாச்சாரம், அதுதான் நம் பாரம்பரியம். 31 டிசம்பர் நம்முடைய புத்தாண்டு கிடையாது, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுதான் நமது புத்தாண்டு! அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.‌

டிசம்பர் 31 நம் புத்தாண்டு கிடையாது.. “இதுதான் நம்ம கலாச்சாரம்!” - நமீதா பரபரப்பு வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

April 14 is our new year actress namitha Video Tamil New Year

People looking for online information on April 14 new year actress namitha, Namitha wishing, Video Tamil New Year will find this news story useful.