Fakir Others Banner USA

சைரா ஷூட்டிங்கில் விபத்து..? - அனுஷ்கா ஷெட்டி விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது சிறிய விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

Anushka Shetty clarifies the rumour about her accident while shooting Chiranjeevi's Sye Raa Narasimha Reddy

'பாகுபலி’, ‘பாகமதி’ திரைப்படங்களுக்கு பிறகு அனுஷ்கா ஷெட்டி, சிரஞ்சீவியின் ‘சிரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் ஷூட்டிங்கின்போது, எதிர்ப்பாராத விதமாக அனுஷ்காவின் காலில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சில வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், இது குறித்து அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். சந்தோஷமாக சீட்டலில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். லவ் யூ ஆல்’ என பதிவிட்டுள்ளார்.

சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிகர் ராம்சரண் தயாரித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து தற்போது ஹேமந்த் மதுர்கர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் உள்ள சீட்டலில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மாதவன், ஷாலினி பாண்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😘😘

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on

Anushka Shetty clarifies the rumour about her accident while shooting Chiranjeevi's Sye Raa Narasimha Reddy

People looking for online information on Accident, Anushka Shetty, Chiranjeevi, Sye Raa will find this news story useful.