#14YEARSOFANUSHKASHETTY - மௌனம் கலைத்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனுஷ்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Anushka Shetty and Madhavan starrer Silence first look has been released

யோகா பயிற்சியாளரான நடிகை அனுஷ்கா ஷெட்டி, கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு தமிழில் ஆதவனுடன் ‘ரெண்டு’ திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, திரைத்துறையில் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, தற்போது அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்திம் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கும் அனுஷ்கா, வாய் பேசாத காது கேளாத பெண்ணாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்று வருகிறது.

கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். தெலுங்கில் ‘நிசப்தம்’ என்றும், மற்ற மொழிகளில் ‘சைலன்ஸ்’ என்ற தலைப்பிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Anushka Shetty and Madhavan starrer Silence first look has been released

People looking for online information on Anushka Shetty, Madhavan, Nishabdham, Silence will find this news story useful.