நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தங்கள் மகள் வாமிகாவின் புகைப்படங்கள் கிளிக் செய்யப்பட்டதை அடுத்து ஒரு அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
தனக்கும், வாமிகாவுக்கும் கேமரா இருப்பது தெரியாது என்றும், இப்படி புகைப்படம் லீக் ஆனது பிடிக்கவில்லை என்றும் அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், அனுஷ்கா - விராத் கோலி அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில் "வணக்கம் நண்பர்களே! எங்கள் மகளின் படங்கள் நேற்று ஸ்டேடியத்தில் படம் பிடிக்கப்பட்டு, அதன்பிறகு பரவலாகப் பகிரப்பட்டதை நாங்கள் உணர்கிறோம். கேமரா இருந்தது தெரியாமல் நாங்கள் படம் பிடிக்கப்பட்டோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். . இந்த விஷயத்தில் எங்களின் நிலைப்பாடும் கோரிக்கையும் எப்பொழுதும் அப்படியே இருக்கும். நாங்கள் முன்பு விளக்கிய காரணங்களுக்காக வாமிகாவின் படங்கள் கிளிக் செய்யபடாமல்/வெளியிடப்படாமல் இருந்தால் நாங்கள் மிகவும் பாராட்டுவோம்." என புகைப்பட பத்திரிக்கையாளர்களுக்கு இதே அறிக்கை குறிப்பை விராட் கோலி - அனுஸ்கா ஜோடி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பகிர்ந்து சமூகத்துக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பாப்பராசி மற்றும் ரசிகர்களுக்கு ஏன் தங்கள் பெண் குழந்தையின் படங்களையோ வீடியோக்களையோ வெளியிடக்கூடாது என ஒரு அறிக்கை மூலம் வெளிப்படுத்தினர்.
அதில், "நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையை வழங்குகிறோம், மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ அவளுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். குழந்தைக்கு வயதாகிவிட்டால் அவளது நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. எனவே உங்கள் ஆதரவு தேவை, எனவே தயவுசெய்து இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்". என கேட்டுக்கொண்டனர்.
ஒரே படத்தில் மூன்று அக்கட தேசத்து முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேரும் விஜய் ஆண்டனி!
ஜனவரி 2021 இல் குழந்தை பிறந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, ஊடகவியாலாளர்கள் படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு விராத் கோலி - அனுஷ்கா சர்மா இணைந்து வேண்டுகோள் வைத்தனர். அதில், "வணக்கம், இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எங்களுக்கு அளித்த அனைத்து அன்புக்கும் நன்றி.
இந்த முக்கியமான நிகழ்வை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெற்றோராக. , உங்களிடம் ஒரு எளிய கோரிக்கையை வைக்கிறோம். எங்கள் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புகிறோம், உங்கள் உதவியும் ஆதரவும் எங்களுக்குத் தேவை." என புகைப்படம், விடியோ எடுப்பதை தவிர்க்க கேட்டுக்கொண்டிருந்தனர். இச்சூழலில் குழந்தையின் போட்டோ லீக் ஆனது.
"ராஜூ என்னை Hate பண்றாரா?".. BiggBoss ரசிகரின் கேள்விக்கு பாவனி பதில்! வீடியோ