பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் முழு படமும் எடுக்கப்பட்டு உருவாகி வரும் இரவின் நிழல் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | The wait is over… ’160 மொழிகளில் அவதார் 2’… ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!
இரவின் நிழல்…
தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய திரைப்படங்கள் பரவலாகக் கவனத்தைப் பெற்றன. ஒத்த செருப்பு படம் முழுவதும் அவர் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து இப்போது அவர் அடுத்த வித்தியாச முயற்சியாக ஒரே ஷாட்டில் உருவாகும் படமாக ’இரவின் நிழல்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் இந்த படத்தைக் காண ஆவலாக உள்ளனர். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டது கவனத்தைப் பெற்றது.
ரிலீஸூக்கு முன்பே கிடைத்த அங்கீகாரம்…
உலகளவில் இந்த மாதிரி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன. இந்நிலையில் இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளன. மே மாதம் 1-ஆம் தேதி அன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ஆர். இரவின் நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களான பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
படத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குனர்…
இந்நிலையில் இப்போது இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனின் முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் தன்னுடைய இரவின் நிழல் படத்தை பாலிவுட் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் அதிகம் கலந்துகொண்டு இந்திய சினிமாவின் முகமாக இருப்பவருமான அனுராக் காஷ்யப்புக்கு திரையிட்டுக் காட்டியுள்ளார். அது சம்மந்தமான பதிவில் “அனுராக் காஷ்யப் இந்தப் பெயர் … இந்திய அளவிலிருந்து உலக அரங்கிற்குள் ஊடுருவி பிரசித்திப் பெற்றது.
’இரவின் நிழல்’ கண்டபின் இருக்கையிலிருந்து எழாமல் மொபைலில் உலகத் திரைப்பட விழாக்களுக்கு ‘கண்டதில்லை இதற்கு முன் இப்படி ஒரு பட’மென மெயில் அனுப்பினார். “Amazing”என்றபடி எழுந்தார். வீடியோ துணுக்கு கேட்டதற்கு“ படத்திலிருந்து விடுபட நீண்ட நேரம் பிடிக்கும் ‘தங்களின் முந்தைய படங்களை அவசியம் பார்க்க வேண்டும் அனுப்புங்கள் எனக்கு” என்றபடி நகர்ந்தார். பெருமிதம் மிதந்ததென் கண்களில். நம்மூர் ரசிகர்களும் இப்படியே ரசித்தால்? K G F” என பதிவு செய்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8