பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.
ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் ப்டமும், 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாப்பி நியூ இயர் படமும் கடைசியாக 2015ல் வெளியான தில்வாலே படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருந்த ஷாருக்கானுக்கு, ரயிஸ், பேன், ஜீரோ படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். தமிழில் வெற்றிமாறன், அட்லி ஆகியோர் கதை சொல்ல, அட்லி அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார்.
இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இரண்டு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் முன்னோட்டமும் வெளியாகி உள்ளது. பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு புனேயில் கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு "Lion" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஷாருக்கான், தனது சொந்த OTT தளமான 'SRK+' யை துவக்கி உள்ளார். 'SRK+ விரைவில் வரும்' என்ற எழுத்துருவுக்கு அடுத்ததாக கட்டைவிரலைக் காட்டும் தனது புகைப்படத்துடன் அவர், "குச் குச் ஹோனே வாலா ஹை, OTT கி துனியா மே" என்று ட்வீட் செய்துள்ளார்.
ஆச்சரியமாக Gangs Of Wasseypur, Black Friday, Choked மற்றும் பல படங்களை இயக்கிய இந்திய சினிமாவின் Most Wanted இயக்குனர் அனுராக் காஷ்யப், ஷாருக்கானின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, கிங் கானின் OTT உடன் இணைவதை அறிவித்தார். "கனவு நனவானது! @iamsrk உடன் இணைந்து தனது புதிய OTT செயலியான SRK+". என ட்வீட் செய்துள்ளார்.