பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை பார்த்த பின் இயக்குனர் அனுராக் காஷ்யப் பதிவிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read | நடிகர் சரவணன் நடித்த 'THE LEGEND'.. உலகளவில் செய்த மொத்த வசூல் இத்தனை கோடி ரூபாயா! ஆஹா
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.
'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் “நட்சத்திரம் நகர்கிறது” படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.
இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் நடத்தது.
இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் போஸ்டர்கள், டீஸர் & டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் நாளை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை சிறப்பு திரையிடலில் பார்த்த இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்து எழுதியுள்ளார். அதில், "நேற்று இரவு நட்சத்திரம் நகர்கிறது பார்த்தேன். தணிக்கை செய்யப்படாத பதிப்பு. பா ரஞ்சித்தின் தலைக்குள் ஓடும் படம் இது. அவருடைய குழப்பமான மனதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அங்கு அவரது பல அடையாளங்கள், உரையாடல்கள் மற்றும் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றன. கதாபாத்திரங்கள் எப்படி இருக்க விரும்புகிறார்களோ மற்றும் இருக்க வேண்டுமோ, அவர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள் மேலும் கதாபாத்திரங்கள் அவர்களின் வேர்களில் ஊன்றி இருக்கிறார்கள்.
இது காதல், பாரபட்சம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிற்கு மேலாக எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றிய படம். படத்தில் ரெனே கதாபாத்திரம் பா. ரஞ்சித்தின் ஆத்மாவை உள்வாங்குகிறார்.
இது அவரது படைப்பில் தனிப்பட்ட படைப்பு மற்றும் எனக்கு மிகவும் பிடித்த பா ரஞ்சித் படம். இந்த படத்தில் அவர் மிகவும் பரிபூரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருக்கிறார்.
அனைத்து அற்புதமான நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் முழு குழுவினருக்கும் வாழ்த்துகள்." என கூறியுள்ளார்.
இந்த படம் இந்திய சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு CBFC, 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | அமெரிக்காவில் வசூலில் மாஸ் காட்டிய தனுஷ்.. 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முழு வசூல் விவரம்!