சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் இன்று (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிற்ய்வனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அண்ணாத்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் கைப்பற்றியது. இந்நிலையில், ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை Qube டிஜிட்டல் சினிமா புரொவைடர் கைப்பற்றியது. அண்ணாத்த (தமிழ்) - பெத்தண்ணா (தெலுங்கு) படத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, ஐரோப்பா, மலேசியா, மிடில் ஈஸ்ட், வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ரிலீஸ் ஆனது.
US-ல் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் அண்ணாத்த படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. பிரான்சிலும் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் அண்ணாத்த படம் ரிலீஸ் ஆனது. ஆஸ்திரேலியாவில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், நியூஸிலாந்தில் சுமார் 10 திரையரங்குகளிலும், கனடாவில் சுமார் 14 திரையரங்குகளிலும், மலேசியாவில் சுமார் 100 திரையரங்குகளிலும், மிடில் ஈஸ்டில் சுமார் 80 திரையரங்குகளிலும், வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூரில் சுமார் 20 திரையரங்குகளிலும், ஸ்ரீலங்காவில் சுமார் 50 திரையரங்குகளிலும், மற்றும் இங்கிலாந்தில் 30 திரையரங்குகளிலும் அண்ணாத்த படம் வெளியானது.
சுமார் 1100+ வெளிநாட்டு திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியானது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளிநாடுகளில் (ஐரோப்பா தவிர) ஒரே ஷோவில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக Qube டிஜிட்டல் சினிமா புரொவைடர் நிறுவனம் அதிகாரபூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது.
#BOXOFFICE UPDATE:#Annaatthe collects ~USD$1.5M across all first shows overseas excluding UK & Europe!
Released in 1125 theatres overseas! Find the nearest theatre & book tickets now https://t.co/59VJO6WMZ3
Chumma Adhiruthulla🔥@sunpictures @directorsiva @rajinikanth #Peddanna
— Qube Cinema (@qubecinema) November 4, 2021