தமிழில் கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் தொடங்கி பல திரைப்படங்களில் நடித்து, முன்னணி ஹீரோயின்களுள் ஒருவராக திகழும் நடிகை அஞ்சலி, தற்போது ஃபால் எனும் வெப் சீரிஸில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Also Read | துணிவு பட பணியில் மீண்டும் BIGG BOSS மமதி.. அவரே வெளியிட்ட ஃபோட்டோஸ்!
இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில், பிரத்தியேக பேட்டி அளித்த நடிகை அஞ்சலியிடம், “நீங்கள் நடித்த படங்களில் அஞ்சலி இவ்வளவு அழகா இருக்கியே என்று உங்களுக்கே தோன்றிய படமாக எது இருந்தது?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு முதலில் யோசித்த அஞ்சலி, “டக்கென்று கேட்டதால் ஒரு படம் சொல்கிறேன். ஆனால் அதற்காக மற்ற. படங்களில் எனக்கு பிடிக்கவில்லையா என்று நினைத்துவிட வேண்டாம். முதலில் நினைவுக்கு வருகிறது என்பதால் சொல்கிறேன். எனக்கு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் என்னை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அதற்கு முன்பாக, ‘கற்றது தமிழ்’ படத்தில் கொஞ்சம் டார்க் ஸ்கின் இருக்கும். அதேபோல், ‘அங்காடி தெரு’விலும் டல்லாக இருப்பேன். கேரக்டர் ரீதியாக அந்த படங்களும் நன்றாகவே அமைந்தன.
அதே சமயம், ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் என்னை மிகவும் அழகாக பார்க்க முடியும். தயாரிப்பாளர் முருகதாஸ் சார் கூட எனக்கு மேக்கப் போடாமல் நேச்சுரல் டோனில் காட்ட சொன்னார். மொத்த படக் குழுவும் அதில் முனைப்பாக இருந்தனர். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்னையும் இயல்பான என்னுடைய நேச்சுரல் ஸ்கின் டோனில் காட்டுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.
இதே போல் கற்றது தமிழ் திரைப்படம் வெளியானபோது இருந்த வரவேற்பு குறித்து கேட்கப்பட்டபோது, “அந்த நேரத்தில் நான் சினிமாவுக்கு புதுசு என்பதால் அந்த திரைப்படம் எப்படியான வரவேற்பு பெற்றது என்பது போன்ற சினிமா சார்ந்த விஷயங்கள் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் படம் வெளியாகி 13-14 வருடங்கள் ஆகின்றன. இப்போதும் அந்த படத்தை அந்த நேரத்தில் எப்படி எல்லாம் ரசிகர்கள் பார்த்தார்கள் என்பது குறித்த நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்ததை சோசியல் மீடியாக்களில் காண முடிந்தது. நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணமான முதல் படம். அந்த படத்தில் நான் அறிமுகமானதை மிகவும் பெருமிதமாக கருதுகிறேன்.
அந்த திரைப்படத்தின் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. இயக்குனர் ராம் சார் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது” என்று குறிப்பிட்ட அஞ்சலி, இன்றும் பலரும், ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் வரும் ஆனந்தி கேரக்டரின், ‘நிஜமா தான் சொல்றியா’ எனும் புகழ்பெற்ற வசனத்தை பற்றி பேசுவது குறித்தும் சிலாகித்து பேசி இருக்கிறார்.
அஞ்சலி பேசும் முழு பேட்டியின் வீடியோவை இணைப்பில் காணலாம்.
Also Read | செம்ம..! தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆன 90S இளசுகளின் ஃபேவ்ரைட் திரைப்படம் "காதல் தேசம்"..!!