www.garudavega.com

VIDEO: எப்படி பேசணும்னே 'உங்களுக்கு' தெரியாதா?... வெளுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கை சரியாக செய்யாத இருவரை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் அறிவித்தார். டாப்பிள் கார்டை வைத்து சம்யுக்தாவை நாமினேஷனுக்கு கொண்டு வந்த அனிதா நேற்று அவர் சொன்ன சில விஷயங்களை பொதுவில் தெரிவித்தார். உங்க பருவ டச் பண்ற மாதிரி ஆகிருச்சு, பர்சனலா எனக்கு உங்கள புடிக்காது என சம்யுக்தா தெரிவித்ததாக அனிதா சொல்லி ஜெயிலுக்கு செல்ல அவரை நாமினேட் செய்தார்.

Anitha revealed shocking information about Samyuktha

இதைப்பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு மத்தவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா? ஏன் எப்பவுமே இப்படி நடந்துக்கிறீங்க என சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். முன்னதாக ஆரியை வளர்ப்பு சரியில்லை, அனிதாவை கல்ச்சர் தெரியல, சனமை கலீஜ், அனிதாவுக்கு சிடுமூஞ்சி மேக்ஸ், சனம், அனிதா இருவரும் முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ் என பல்வேறு பட்டபெயர்களை வைத்து சம்யுக்தா தொடர்ந்து அவர்களை நாமினேட் செய்திருந்தார். 

ஒருசிலரை தவிர மற்றவர்களை சம்யுக்தா தொடர்ந்து கிண்டலடித்து பட்டப்பெயர்கள் வைத்து நாமினேட் செய்து வருவது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் இந்த வாரம் அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள்? என்பது இன்று மாலைக்குள் எப்படியும் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Anitha revealed shocking information about Samyuktha

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.