BiggBossUltimate: பிக்பாஸின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகவும், தனக்கும் பிக்பாஸ்க்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் கூறி விளையாட்டு பண்ணி வரும் விஷயம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்
டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனிதா Vs சுரேஷ்
இதில் தற்போது சுரேஷ் தாத்தா என்று அழைக்கப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகிவிட்டார். முன்னதாக அவர் வெளியேறியதும், பிக்பாஸ் வீட்டில் நீதி வென்றது என அனிதா எழுதி வைத்திருந்த விஷயம் பரபரப்பானது. இதேபோல் அனிதா பேசும் ஒரு ஆடியோவை சுரேஷ் வெளிவிடுவதாக பிக்பாஸ் வீட்டுக்குள் கூறியிருந்ததாக சொல்லப்பட்ட விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனிதா.. விஷபாட்டில்
பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் இதுபற்றி பேசிக்கொண்ட சினேகன் மற்றும் பாலாஜி இருவரும், அனிதா மற்றும் சுரேஷ் இருவரையும் குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அதன்படி, “சுரேஷ் தாத்தா கொஞ்சம் ஓட்ட வாய் தான் என்றாலும் யாருக்கு கெடுதல் நினைப்பவர் அல்ல, அவர் வெளியேறியதும் எதற்கு நீதி வென்றது என எழுத வேண்டும்?, உண்மையில் அனிதாவை விஷ பாட்டில் என சொல்வதில் தவறில்லை” என பேசினார்கள்.
விஷம் அமிர்தம் மாதிரி
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு பட்டம் கொடுக்கும்போது அனிதாவுக்கு விஷ பாட்டில் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. சக போட்டியாளர்களால் ஓட்டு போடப்பட்டு கொடுக்கப்பட்ட இந்த பட்டத்தை அனிதாவுக்கு தாமரை தான் வழங்கினார்.
ஆனால் தாமரை, அனிதாவுக்குதான் அந்த பட்டதை வழங்கப் போகிறோம் என தெரியும் முன்பே, “எனக்கெல்லாம் விஷம் என்பது அமிர்தம் மாதிரி.. ஆகையால் இந்த பட்டத்தை வாங்கிக் கொள்பவர்கள் சந்தோஷப் பட வேண்டும்” என பாசிடிவாக பேச, அப்போது அனிதா தாமரைக்கு நன்றி சொல்லி தானும் அதே கருத்தை வழிமொழிந்தார். இப்படி அனிதா, தாமரை இருவரும் பிக்பாஸ் வீட்டில் நன்றாகவே நண்பர்களாகிவிட்டனர்.
பிக்பாஸின் லிட்டில் பாஸ் என் வயித்துல வளருது..
தாமரை, அனிதா இருவரும் அடிக்கும் லூட்டிகள், இவர்களின் ஃப்ரண்ட்ஷிப் பிக்பாஸ் ரசிகர்களை நெகிழவைத்துள்ளது. இந்நிலையில் தான் பாதாள சிறையில் அமர்ந்து பேசிக்கொண்ட இவர்கள் செம ஃபன்னாக பேசிக்கொண்டுள்ளனர். அதில், “பிக்பாஸ்க்கும் அனிதாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது” என தாமரை பேச, “ஆமாம். பிக்பாஸின் லிட்டில் பாஸ் என் வயித்துல வளருது” என சொல்லி சிட்டுக்கிளிகள் போல் கெக்கரித்து சிரித்தனர்.
பிக்பாஸ்.. உங்க மனைவியை இப்படி பண்றாங்க.
அருகில் இருந்த ஜூலியும் இருக்க, மூவரின் அலப்பறையும் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கியது. ஆம், அனிதாவின் தலையை முடித்து ஆட்டி, ஜூலி பாட்டு பாடி இருக்கிறார். அதற்கு அனிதாவும், தாமரையும், “பிக்பாஸ்.. பாருங்க உங்க மனைவியை எப்படி பண்றாங்கனு?” என்று மாறி மாறி காமெடி செய்தனர்.
Bigg Boss Tamil OTT
இதனிடையே அனிதாவின் இந்த பேச்சை பற்றி சிலர் அதிருப்தி தெரிவித்து விமர்சித்தும், சிலர் பாசிடிவாகவும் பேசி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணிநேரமும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.