பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மனைவியும் பிரபல நாட்டப்புற பாடகியான அனிதா குப்புசாமியும் அவரது மகளும் டாக்டருமான பல்லவி குப்புசாமியும் Behindwood-க்கு கலகலப்பாக அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யங்கள் குறித்து தாராவிடம் பகிர்ந்துள்ளனர்.
அதில் அனிதா குப்புசாமி பேசும்போது, “எனக்கு இரண்டுமே பெண் குழந்தைகள் என்பதால் பல்லவியை ஆண் பிள்ளை போலவே துணிச்சலாக வளர்த்தேன். அவளும் அப்படி தான் வளர்ந்தாள். பிள்ளைகள் முடிவை அவர்களை துணிச்சலாக வளர்த்தால் அவர்கள் எடுப்பார்கள். அப்படி அவர்கள் சரியான முடிவை எடுத்தால் பெற்றோர் அதை வரவேற்க வேண்டும். பலர் அப்படி இல்லை. 10வது படிக்கும்போதே கார் எடுத்து ஓட்டுவாள். எங்கு சென்றாலும் யாரை பார்த்தாலும் யாருக்கேனும் உதவி செய்ய போனாலும் எல்லாவற்றையும் முன்கூட்டியே பகிரச் சொல்வேன். முழு சுதந்திரம் கொடுக்கும் அதே சமயம் அவளுடைய பாதுகாப்பும் எனக்கு முக்கியம். அவளுடன் இருக்கும் அனைவரின் விபரங்கள், போன் நம்பர்களையும் வாங்கி வைத்திருப்பேன். ஒரு கட்டத்துக்கு மேல் என் பதட்டம் அவளுக்கும் புரியும். எங்கள் 4 பேருக்கும் செல்லப்பிராணிகள் பிடிக்கும் சாலைகளில் திரியும் பூனை, நாய்க்குட்டிகளை கூட எடுத்து வந்து கொஞ்சுவோம். அவை அடிபட்டுக் கிடந்தால் ஃபீல் பண்ணுவோம். ஏற்கனவே 5 செல்ல பிராணிகள் வீட்டில் உள்ளன. லவ் மேரேஜை பொருத்தவரை பையன் பின்னணி சரியாக இருந்தால் க்ரீன் சிக்னல் தான். நிறைய கதைகளை நாம் பார்க்கிறோம். அவளுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். ஆனால் பாடுவதை கூடாது என தடை போடவில்லை என்றாலும் இதை புரொபெஷனலாக எடுத்துக்கொண்டு மீடியாவுக்கு போக வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனாலும் நன்றாக பாடுவாள். சின்னவளுக்கு நன்றாக வெஸ்டர்ன் பாட வரும். என் கணவருக்கு உலகமே பாட்டும் குடும்பமும் தான். என் குழந்தைகளுக்கு மனிதாபிமானம் அற்ற சிந்தனை இருக்க கூடாது. கலாச்சாரம், ஆன்மிகம் உள்ளிட்டவற்றை கைவிட்டுவிடக் கூடாது என சொல்லுவேன். அவர்களுக்குள்ளும் அந்த உணர்வும் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மகள், பல்லவி குப்புசாமி பேசும்போது, “ஒரு டாக்டராக நான் சொல்வது பலர் கொரோனா விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். இன்னும் தடுப்பூசி எடுக்காமல் இருக்கிறார்கள். அனைவரின் பாதுகாப்பு குறித்தும் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும். சேர்ந்தால் எம்பிபிஎஸ் இல்லையென்றால் வீட்டில் தான் இருப்பேன் என அடம் பிடித்து டாக்டர் ஆனேன். அம்ம சின்ன வயசுல இருந்தே ஒரு சுதந்திரம் கொடுப்பாங்க. எனினும் என்னைவிட 10 வருடம் வயதில் குறைவான தங்கையை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு நான் வளர்ந்துவிட்டேன் என்ற பிறகு அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் க்ளாஸ் கட் பண்ணிட்டு வெளியே சென்றால் கூட நண்பர்களுடன் செல்வது படத்துக்கு போவது எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லிவிடுவேன். பெற்றோர் அளிக்கும் சுதந்திரத்தை மிஸ் யூஸ் பண்ண கூடாது. அது பாதுகாப்பானதும் கூட. 4 பேரும் வீட்டில் சேர்ந்தால் ரகளை தான். அப்பாவை இந்தியில் நானும் அம்மாவும் கலாய்த்துக்கொண்டிருப்போம். அவருக்கு புரிந்தாலும் புரியாத மாதிரி இருப்பார். அப்பா எதுவாயினும் அதை சரி பண்ணாமல் புதிய பொருள் வாங்கி தந்துவிடுவார். அம்மாவின் செலவுகளை நான் தான் கண்ட்ரோல் பண்ணுவேன். மற்ற வீடுகளில் இது அப்படியே தலைகீழாக இருக்கும். நான் இளையராஜா பாடலுக்கு தான் Fan. அம்மா என்ன நடந்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பார். நான் கொஞ்சம் எமோஷனல். அப்பாவுக்கு குடும்பத்தை தவிர எதுவும் தெரியாது. உலகமே அவருக்கு குடும்பம் தான்.” என குறிப்பிட்டுள்ளார்.
பல்லவி குப்புசாமி பாடிய பாடல், அனிதாவின் மனம் திறந்த முழுமையான பேட்டி, இருவருக்கும் நடந்த கேள்வி- பதில் டாஸ்க் உள்ளிட்ட, இந்த பேட்டியின் முழுமையான வீடியோவை இணைப்பில் காணலாம்.