இதுநாள்வரை சனமுடன் நன்கு பேசிக்கொண்டு இருந்த அனிதா திடீரென நேற்று அடித்த பல்டியில் ரசிகர்களே ஆடிப்போய் விட்டனர். போட்டியாளர்கள் தங்களை தாங்களே வரிசைப்படுத்தி கொண்டபோது அனிதாவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அவர் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு அது வேண்டாம் என கிளம்பி விட்டார்.
பின்னர் அனிதா, பாலாஜி, ஜித்தன் ரமேஷ், ஆரி, ரம்யா பாண்டியன் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அனிதா சனம், பாலாஜியுடன் சண்டை போட்டு குறைந்தது இரண்டு ப்ரோமோவில் இடம்பெற்று இருப்பார் என்று சனமை கலாய்த்தார். ஜித்தன் ரமேஷும் சனம் எல்லா விஷயத்திலும் குறுக்கிடுகிறார் என கருத்து தெரிவித்தார்.
Even I said #Anitha said she s t best but anitha unaku andha place ah vanga therlana andha place irundha #Sanam yen enemy ah pakura!!
Aprm odaney Balti pottu Teasing her with #SleepingRamesh 👎
Ungaluku lam pesa kuda topic #Sanam dan 🔥#BiggBossTamil4
— SanamFandom (@FandomSanam) December 3, 2020
பாலாஜி என்னோட செருப்பு புதுசு அதான் என்ன நானே அடிச்சுக்கிட்டேன் என்று காமெடி செய்ய, ரம்யா தன் பங்குக்கு பாலாஜியை கலாய்த்தார். இந்த கூட்டத்தில் சனமை கலாய்க்காத ஒரே நபர் ஆரி மட்டுமே. இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வேணும்னா நீங்க பேசி வாங்கி இருக்கணும். அதை விட்டுட்டு ஏன் சனமை கொற சொல்றீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.