8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது மேடையில் கால் பதித்திருந்தனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.
Best Music Director Of the Decade
இந்த நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் அனிருத், "Best Music Director Of the Decade - Tamil" என்னும் விருதினை தட்டிச் சென்றார். அவருக்கு இந்த விருதை நடிகை பூஜா ஹெக்டே மற்றும் வசந்த் ராஜ் குரு ஆகியோர் வழங்கி இருந்தனர்.
விருது வென்ற பின்னர், மக்கள் முன்னிலையில் பேசிய அனிருத், "நீண்ட நாட்களுக்கு பிறகு, இப்படி மக்கள் கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.இங்கே வந்த அனைவருக்கும் நன்றி. அதே போல தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் தீனா ஆகியோருக்கும் நன்றிகள்" என தெரிவித்திருந்தார்.
பத்தல பத்தல பாட்டுக்கு 'செம' டான்ஸ்
தொடர்ந்து, தீனாவும் நீங்கள் அனைத்து பாடல்களுக்கும் நடனமாடி விட்டீர்கள் என்றும், விக்ரம் படத்தில் வரும் பத்தல பத்தல பாடலுக்கு மட்டும் நடனமாடவில்லை என்றும் கூற, மறுகணமே சம்மதித்து நடனமாட தொடங்கி விட்டார் அனிருத். இதனைக் கண்டு அங்கிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும், ஆர்ப்பரித்து கொண்டாட, மிகவும் அசத்தலாக நடனமாடி இருந்தார் அனிருத்.
இதன் பின்னர், தன்னுடைய இசை பயணத்தை குறித்தும் மேடையில் பேசி நெகிழ்ந்து போனார் அனிருத். தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள "Thalaivar169" படத்தின் படப்பிடிப்பு, சில மாதங்களில் ஆரம்பமாகவுள்ளது என்றும், மூன்றாவது முறையாக ரஜினி சார் படத்திற்கு இசையமைக்கவுள்ளது, உற்சாகமாக உள்ளது என்றும் அனிருத் குறிப்பிட்டிருந்தார்.