BGM 2022 : "சும்மா வந்தாலே பத்திக்கும், நடுவுல இது வேறயா??.." BEHINDWOODS விருது மேடையில் ANIRUDH செஞ்ச சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Anirudh dance for arabic kuthu in Bgm awards 2022

அதன் படி, முதல் நாளான நேற்று (21.05.2022) நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகைகள் சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடனம், விருது என முதல் நாள் நிகழ்ச்சி முழுவதும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, பல பிரபலங்களும் விருதுகளை பெற்றிருந்தனர். இதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து தளபதி விஜய் படம் குறித்து பேசிய விஷயங்கள், அரபிக்குத்து பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடி இருந்தது உள்ளிட்ட நிகழ்வுகள், அதிக அளவில் வைரலாகி இருந்தது.

ஏராளாமான பிரபலங்கள்

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்றும், ஏராளாமான பிரபலங்கள் Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். இயக்குனர்கள் வெற்றிமாறன், செல்வராகவன், விக்னேஷ் சிவன், நெல்சன், வினீத் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர்கள் அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ரவி பஸ்ரூர், நடிகர் எஸ்ஜே சூர்யா, ஆர் ஜே பாலாஜி, நடிகைகள் பூஜா ஹெக்டே, கல்யாணி பிரியதர்ஷன், சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன், கீர்த்தி ஷெட்டி, அரசியல் தலைவர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

நடனமாடிய அனிருத்

அது மட்டுமில்லாமல், பல பிரபலங்கள் இந்த மேடையில் விருதுகளையும் வென்றிருந்தனர். இந்நிலையில், விருது வாங்கிய பின் இசையமைப்பாளர் அனிருத் மேடையில் நடனமாடிய வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அனிருத் இசையில் உருவாகி இருந்த 'பீஸ்ட்' படத்தின் அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.

அதிலும் குறிப்பாக, அரபிக்குத்து பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே, Behindwoods மேடையில் விருது வாங்கிய பின்னர், அரபிக்குத்து பாடலுக்கு மக்கள் முன்னிலையில் நடனமாடி இருந்தார் அனிருத். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது மக்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh dance for arabic kuthu in Bgm awards 2022

People looking for online information on Anirudh Ravichander, Behindwoods Gold Medals Awards 2022, BGM 2022, BGM 8 will find this news story useful.