அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி சமூக ஆர்வலராகவும் நடிகையாகவும் உலகம் முழுவதும் பிரபலமானவர்.
குறிப்பாக அமெரிக்க பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அகதிகளுக்கான நல்லெண்ணத் தூதராகவும் ஐ.நா ஆணையத்தில் இருக்கிறார். இந்த நிலையில்தான் அவரது இன்ஸ்டாகிராம் பதிவை அடுத்து, ஒரே நாளில் வைரலாகி 5 மணி நேரத்தில் அவருடைய ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கின்றனர்.
அதுவும் இதுவரை இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ்களை குவித்து கின்னஸ் ரெக்கார்ட் படைத்த jennifer aniston-ஐ முந்தி இருக்கிறார். மேலும் அமெரிக்க நாட்டு படை பின்வாங்கியதை அடுத்து ஆப்கானில் மக்கள் கொல்லப்படுவதை கடுமையாக சாடியிருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.
இதுதொடர்பான தமது பதிவில் தாலிபான்கள் குறித்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர், தனக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளார் ஏஞ்சலினா ஜோலி. அந்த சிறுமி எழுதிய கடிதத்தில், “20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டு எங்களுடைய வாழ்க்கை இருளில் மூழ்கி இருக்கிறது. திரும்பவும் சுதந்திரம் என்பதை இழந்து சிறை பட்டிருக்கிறோம்.” என்று எழுதி இருக்கிறார்.
இதை பகிர்ந்துள்ள ஏஞ்சலினா ஜோலி, “சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்தை பதிவிட முடியாத நிலையில் தான் ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போது உள்ளனர். இரட்டை கோபுர தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நான் இருந்தேன். அந்த சமயம் தான் சொந்த நாட்டில் இருந்து அகதிகளை தப்பிப்பதைக் கண்டு அதிர்ந்தேன்.
அது கடினமான ஒரு நிலை. எனவே நான் இன்ஸ்டாகிராமிற்கு வந்திருக்கிறேன்.. அவர்களின் பதிவுகளை மற்றும் வாய்ஸ் ஓவர்களை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, அவர்களின் அடிப்படை உரிமைக்காக அனைவரும் போராட வேண்டும் என்பதற்காக”. என பதிவிட்டுள்ளார்.