உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சிந்து., கண்ணீருடன் நடந்த விஷயங்களை தெரிவித்தார்.
வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்தவர் சிந்து. இவர் பல்வேறு திரைப்படங்களிலும், சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனிடையே மார்பக புற்றுநோயால் அவதிப்படும் நடிகை சிந்து, மருத்துவ உதவி கேட்டு அண்மையில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.
இதை தொடர்ந்து, நடிகை சிந்து நம்மிடம் பிரத்யேகமாக உரையாடினார். அப்போது அவர் பல விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய சிந்து, ''நான் பலருக்கு உதவிகள் செய்திருக்கிறேன். ஆனால், இந்த நேரத்தில் நான் சந்தித்தது துரோகத்தைதான். என் மகளை பற்றியே, சிலர் தவறாக பேசுகின்றனர். மேலும் பல நடிகர்கள், நான் உதவி கேட்ட போது எனது நம்பரை ப்ளாக் செய்துவிட்டார்கள். அவர்களை பெயரை நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் நடிகர்கள் சாய் தீனா, கார்த்திக், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ரோபோ ஷங்கர், சோனியா போஸ் உள்ளிட்ட பலர் உதவிகள் செய்தனர். அதனால்தான் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.
ஆபரேஷனுக்கு பிறகு ஆகும் செலவுகளுக்கு என்னிடம் இப்போது போதுமான பணமில்லை. கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் மருந்து செலவுகளுக்கே ஒரு வாரத்திற்கு எனக்கு 30 ஆயிரம் தேவைப்படுகிறது. இதற்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.
If you are living in India & wish to Donate and Help Sindhu for her treatment:
Bank Details:
Account Name: Behindwoods Foundation
Account Number: 919020014260785
IFSC Code: UTIB0001504
If you are an NRI & wish to Donate from Abroad:
WhatsApp no: +91 9003019000