மேடையில் பாடி வந்த ஆண்ட்ரியா, திடீரென ரசிகர்கள் செயலால் கோபம் அடைந்த சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடைசியாக 'மாஸ்டர்' மற்றும் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் தோன்றி இருந்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக பிசாசு 2, நோ என்ட்ரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்தாலும், ஆண்ட்ரியா ஒரு பிரபலமான பின்னணி பாடகியும் கூட. இது போக, சில நடிகைகளுக்கு வேண்டி, டப்பிங்கும் அவர் செய்துள்ளார்.
கோவில் திருவிழாவில் ஆண்ட்ரியா
அதிலும் குறிப்பாக, அவர் கடைசியாக பாடிய புஷ்பா படத்தில் வரும் "ஊ சொல்றியா மாமா" என்னும் பாடல், பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்திருந்தது. இதனிடையே, கோவில் நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக ஆண்ட்ரியா சென்றிருந்த போது, வாக்குவாதம் ஏற்பட்ட தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதிலுமுள்ள பல கோவில்களில் பங்குனி திருவிழா மிக விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதே போல, சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோவிலிலும், திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. அப்போது, அங்கே நடைபெற்ற காலை நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு விருந்தினாராக நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார்.
உம் சொல்றியா மாமா
அவரைக் கண்டதும் அங்கிருந்த மக்கள், ஆர்ப்பரித்துக் கொண்டாடினர். தொடர்ந்து, ஆண்ட்ரியாவிடம் பாட்டு பாடும்படியும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 'Track' வேண்டாம், நான் பாடும் போது, நீங்களும் சேர்ந்து பாடுங்கள் எனக்கூறிய படி, 'உம் சொல்றியா மாமா' பாடலையும் ஆண்ட்ரியா பாடுகிறார். அதனைக் கேட்ட பொது மக்கள், விசில் அடித்து, கத்தி மேலும் ஆர்ப்பரித்துத் தள்ளினர்.
மேலும், மக்களின் சத்தம் மற்றும் அங்கு வெடி கொழுத்தி இருந்ததால், அது தனக்கு தொந்தரவாக இருப்பதாக ஆண்ட்ரியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அடுத்த பாடலை பாடும்படி, ரசிகர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படும் நிலையில், அடுத்த பாடலையும் ஆண்ட்ரியா பாடி முடிக்கிறார்.
அடுத்து டான்ஸ்..
இதனைத் தொடர்ந்து, பாடலுக்கு பிறகு, ஆண்ட்ரியாவை நடனமாட வேண்டும் என்றும், ரசிகர்கள் கத்தித் தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால்,கோபமடைந்த ஆண்ட்ரியா, நீங்க வந்து ஆடுங்க என்றபடி, அங்கிருந்தவர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து, அங்கிருந்து பாதியிலியே ஆண்ட்ரியா கிளம்பிச் செல்ல முயன்றதாகவும், பின்னர் போலீசார் வந்து அங்கிருந்த கூட்டத்தினை கட்டுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தெடர்பான வீடியோ காட்சிகள் தற்போது அதிகம் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.