உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார் இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களும் வீட்டில் இருக்கின்றனர். மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே இந் நோயை ஒழிப்பதற்கான தற்போதைய ஒரே வழி என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான ஜாக்லின் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் தனக்கு சமீபத்தில் நடந்த மோசமான சம்பவத்தை பற்றி விவரித்துள்ளார். நேற்றைய தினம் அவர் தெரு நாய்களுக்கு எதிர் வீட்டு கேட்டிற்கு முன்பு சாப்பாடு வைத்துள்ளார். தனது வீட்டில் ஏற்கனவே நாய்கள் இருந்ததால் அப்படி செய்துள்ளார்.
அது தவறு தான் என்றும் அப்படி செய்ததற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனாலும் இதனைப் புரிந்து கொள்ளாத அவர் "வீடு புகுந்து சாத்திடுவேன்" என்று கூறியதும் இல்லாமல், அவரது மதத்தை குறிப்பிட்டு கோபமாக பேசியுள்ளார். இதனால் ஜாக்லின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே 'இதில் என் மதத்தை குறிப்பிட என்ன இருக்கிறது. இந்த சமயத்தில் ஆவது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.