நடிகையும் தொகுப்பாளினியுமான டிடி திவ்யதர்ஷினி தனது கால் வலி குறித்து மனம் திறந்துள்ளார்.
விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. டிடி என சுருக்கமாக அழைக்கப்படுபவர். இவரின் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. ஏற்கனவே பா. பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ள டிடி தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள 'காபி வித் காதல்' படத்திலும் திவ்யதர்ஷினி நடித்துள்ளார் .
இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நாளை (04.11.2022) தமிழகமெங்கும் இந்தப்படத்தை திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு திவ்யதர்ஷினி டிடி பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கால் வலி குறித்து மனம் திறந்த திவ்யதர்ஷினி, "கேமரா ஆன் ஆகிடுச்சுனா கால் வலி எதுவும் தெரியாது. இயக்குனர் சுந்தர் சி கொடுத்த ஊக்கம் இதற்கு முக்கிய காரணம். அதற்கு அவருக்கு தான் நன்றி சொல்லனும். இந்த வாய்ப்பு கூட இல்லாமல் பலர் உள்ளனர். கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது. அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் செய்யனும் என்பது என் நம்பிக்கை. இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது" என திவ்யதர்ஷினி பேசியுள்ளார்.