சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வரும் அர்ச்சனா, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக வந்து கலக்கினார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு அன்பு தான் எல்லாம் எனக் கூறி மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் அர்ச்சனா, சாரா அம்மா, மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதனிடையே, அர்ச்சனாவும் சாராவும் தங்களது யூடியூப் சேனலில் அவர்களது வீட்டில் என்ன இருக்கு பாருங்க ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தி வந்தனர். ஒரு முறை வீட்டில் உள்ள கழிப்பறை பெரிய அறையே கட்டலாம் என்ற அளவிற்கு சிலாகித்து பேசியிருந்தனர். வீட்டு கழிப்பறை விவகாரத்தில் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்தும் அதனை ட்ரோல் செய்தும் வந்தனர். அந்த பிரச்னை தொடங்கி சில மாதங்கள் ஆனாலும், இதன் மீதான வெறுப்பு இன்னும் குறையவில்லை.
அர்ச்சனா, சாரா இருவரும் சமூகவலைதளபக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வகையில் அவர்கள் பதிவிடும் புகைப்படம் வீடியோ எதுவாக இருந்தாலும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்துள்ளனர். அண்மையில் பிரபல சேனலில் அர்ச்சனா, சாரா இருவரும் கலந்துகொண்டு வீடியோவில் நெகட்டிவ் கமான்ட்கள் அதிகமாக வந்துள்ளன. இதனை பார்த்து நொந்து போன சாரா இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஹாய் எல்லோருக்கும் வணக்கம் நாங்களும் மனுசங்கதான், எங்களுக்கும் பல கவலைகள் இருக்கு எதுக்காக என்னையும் எனது அம்மாவையும் இப்படி திட்டுறீங்க. ஏன் இப்படி ஹேட் பன்ற வார்த்தைகளால் திட்டுறீங்க ரொம்ப மனசு கஷ்டமா இருக்கிறது. இவ்வளவு மோசமான வார்த்தைகளால் திட்டியது அதிகமாக பெண்கள் தான் இருக்கின்றனர். எங்க குடும்பம் அன்பை மட்டுமே எடுத்துக்கொள்வோம். அன்பால் மட்டுமே கொடுக்க நினைக்கிறோம். உங்களுக்கு எங்களை பிடிக்கலைனா உங்களது கருத்தை மதிக்கிறோம். உங்களோட நெகட்டிவ் கருத்தை எங்ககிட்ட ஏன் தர்றீங்க, அது ரொம்பவே எங்களை நோகடிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு திரை பிரபலமான திவ்யதர்ஷினி இதை பெரிதாக எடுத்துக்க வேண்டாம் என ஆறுதல் கூறியுள்ளார். மேலும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.