www.garudavega.com

விஜய் நடிக்கும் LEO.. படத்தில் BIGG BOSS அமுதவாணன் நடிக்கிறாரா?.. முழு விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் LEO படத்தில் நடித்து வருகிறார்.

Amudhavanan Instagram Post about Thalapathy67 LEO

Also Read | 500 வருட பழமையான முருகன் கோயிலில் பிரபல இயக்குனருடன் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம்.. PHOTOS

இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

Amudhavanan Instagram Post about Thalapathy67 LEO

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

Amudhavanan Instagram Post about Thalapathy67 LEO

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Amudhavanan Instagram Post about Thalapathy67 LEO

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் அமுதவாணன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனிமலை சூழ்ந்த இடத்தில் எடுத்த ஒரு Throwback புகைப்படத்தை பகிர்ந்து,  "What If" என்ற கேப்சனுடன் தளபதி 67, லோகேஷ் கனகராஜ் ஆகிய Hashtag-களை பதிவிட்டுள்ளார்.  இருப்பினும் அமுதவாணன் லியோ படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Also Read | "கோலங்கள் 400 எபிசோடில் பண்ணத 'எதிர் நீச்சல்' 150-ல பண்ணிடுச்சு".. - இயக்குனர் திருச்செல்வம் EXCLUSIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan Instagram Post about Thalapathy67 LEO

People looking for online information on Amudhavanan, Amudhavanan Instagram Post, Leo, Thalapathy67 will find this news story useful.