ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள்.
அப்படி ஒரு சூழலில் புதிதாக நடைபெறுகிற டாஸ்க் இரண்டு போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். அத்துடன் இரண்டு பேராக பிரியவும் பிக் பாஸ் குறிப்பிடும் நிலையில், அனைத்து போட்டியாளர்களிடமும் தன்னுடன் இணைந்து மோதும் படி கோருகிறார் அமுதவாணன். ஆனால் ஆறு ஹவுஸ்மேட்ஸ் மூன்று அணிகளாக பிரிய அசிம் மட்டுமே பாக்கி இருக்கிறார்.
அசிம் வந்ததும் அவருடன் மோத தயங்கும் அமுதவாணன், இரண்டு பலமுள்ள போட்டியாளர்கள் முதல் சுற்றில் மோதுவது சரியாக இருக்காது என்றும் அசிமிடம் கூறுகிறார். அவருடன் ஆடுவது எனக்கு விருப்பமில்லை என்றும் அமுதவாணன் கூற, அசிமும் அதையே சொல்கிறார். தொடர்ந்து அசிமிடம் உரையாடும் அமுதவாணன், "இரண்டு பேரும் ஒரே அணியில் இருந்தால் முதல் சுற்றிலேயே பெரிய தலைகள் போகும். அது மற்ற அனைவருக்கும் எளிதாகி விடும்" என தெரிவிக்கிறார்.
இதனால், தாங்கள் மோதும் போட்டியாளரை மாற்றும் படி அசிம் மற்றும் அமுதவாணன் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் மற்ற 6 போட்டியாளர்களும் இதற்கு உடன்படவில்லை என தெரிகிறது. இந்த விஷயம், அசிமை சற்று ஆவேசப்படுத்த, இங்கே அனைவரும் Safe கேம் ஆடுவதையும் முன் வைக்கிறார். இது தொடர்பாக தொடர்ந்து சில விவாதங்களும் உருவாவதாக தெரிகிறது.