''விஜய் சார் எவ்ளோ பெரிய ஸ்டார், அவரு போய்...'' - 'பிகில்' படம் குறித்து பிரபல நடிகை கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Amritha speaks about thalapathy Vijay and Atlee's Bigil

பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், இந்துஜா, அம்ரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் நடித்த அனுபவம் குறித்து நடிகை அம்ரிதா Behindwoods TVக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலவில்லை. பின்னர் நான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

அன்று காலையில் எங்களுக்கு படப்பிடிப்பு இல்லை. நான் கேரவனில் இருந்தேன். விஜய் சார் படப்பிடிப்பில் இருந்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு விஜய் சார் என் உடல்நிலை பற்றி விசாரித்தார். அவர் எவ்வளவு பெரிய ஸ்டார் அவர் போய் என்னிடம் கேட்டது என்னால் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.

''விஜய் சார் எவ்ளோ பெரிய ஸ்டார், அவரு போய்...'' - 'பிகில்' படம் குறித்து பிரபல நடிகை கருத்து வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Amritha speaks about thalapathy Vijay and Atlee's Bigil

People looking for online information on Atlee, Bigil, Nayanthara, Thalapathy, Vijay will find this news story useful.