பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவம் முதன் முதலாக தமிழில் படமாகிறது.
Also Read | திருமணத்திற்கு பின்.. தமிழ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நயன்தாரா?!.. வெளியான முழு தகவல்!!
நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும். அந்த வகையில், 'அங்காடித்தெரு' மற்றும்
சமீபத்தில் 'அசுரன்' போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள்.
அதே போல் இப்போது, திருப்பூர் பனியன் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது. இப்படத்திற்கு "குதூகலம்" என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தை ராட் & கேட் பிக்சர்ஸ் (Rat & Cat Pictures) சார்பில் சுகின்பாபு முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த யதார்த்தமான கதையை அமைத்து திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார், உலகநாதன் சந்திரசேகரன். துரை செந்தில்குமார் டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கிசட்டை', 'எதிர்நீச்சல்' படங்களில் துணை இயக்குனராகவும், தனுஷ் நடித்த 'கொடி', 'பட்டாசு' போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
ஒரு இளைஞன், தன் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதே இக்கதை. இதை திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் உருவாக்குகிறார் டைரக்டர்.
இதன் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக 'அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் கவிதாபாரதி, 'விஜயடிவி' புகழ், பியான், சஞ்சீவி, அனிஸ், மன்மோகித், 'மெட்டி' பிரேமி, தயாரிப்பாளர் சுகின்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுகிறது. இப்படத்துக்கு பியான் சர்ராவ் இசையமைக்கிறார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக கொடி, பட்டாசு படங்களில் பணிபுரிந்த பிரகாஷ் மப்பு பணிபுரிகிறார். ஆர்ட் டைரக்டாக, ஆர்ட் டைரக்டர் துரைராஜின் உதவியாளர் கோபி அறிமுகம் ஆகிறார். ஸ்டண்ட் பணிகளை டேஞ்சர் மணி மேற்கொள்கிரார்.
PRO: ஜான்சன்
Also Read | ரசிகர்களுடன் சூரரைப் போற்று படத்த தியேட்டர்ல பார்த்த அனுபவம்.. மனம் திறந்த சுதா கொங்கரா!