பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை சந்திக்க சிறுவன் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்ற சம்பவம் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. அமெரிக்கா & கனடா தியேட்டர் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர் அமிதாப் பச்சன். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அமிதாப் பச்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்க்கு வெளியே காத்திருந்த ரசிகர்ளை சந்தித்தார். அப்போது, அவர்களிடம் அமிதாப் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென சிறுவன் ஒருவன் பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே சென்றிருக்கிறான். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கையில் தான் வரைந்த அமிதாப் பச்சன் ஓவியத்தோடு வந்திருந்த அந்த சிறுவன், பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்று, அமிதாப் பச்சனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறான். மேலும், தான் வரைந்த அமிதாப் பச்சனின் ஓவியத்தில் அவரிடமே ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளான் அந்த சிறுவன்.
இந்நிலையில், இந்த புகைப்படங்களை அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த சிறுவன் தன்னை காண இந்தூரில் இருந்து வந்திருந்ததாகவும், இது தன்னை நெகிழ செய்துவிட்டதாகவும் அமிதாப் பச்சன் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். .
இதுகுறித்து அவர் எழுதிய பதிவில்,"இந்த சிறுவன் தனது நான்கு வயதில் 'டான்' படத்தை பார்த்துவிட்டு இந்தூரில் இருந்து என்னை பார்க்க வந்திருக்கிறார். பொதுவாக எனது காலில் யாரும் விழுவதை நான் விரும்புவது இல்லை. ஆனால், பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஓடிவந்த சிறுவனுக்கு ஆறுதல் அளிக்க வேண்டியிருந்தது. என்னை ஓவியமாக வரைந்து சிறுவன் எடுத்து வந்திருந்தார். அதில் கையெழுத்திட்டு, சிறுவனின் தந்தை எழுதிய கடிதத்தையும் வாசித்தேன். இப்படியான என்னுடைய நலம் விரும்பிகளின் செயல்கள் சில நேரங்களில் நான் தனிமையில் இருக்கும் போது என்னை கலங்க செய்துவிடுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவன் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தன்னிடம் ஓடிவந்து, ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்களையும் அவர் இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். இதனிடையே இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Also Read | "நான்தாங்க பாலிவுட் நடிகர்.." - பேட்டியாளரிடம் நினைவூட்டிய ரன்வீர்..! சுவாரஸ்ய பின்னணி