மும்பை : ஆமிர்கான் தனது புதிய படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிச் செய்துள்ளார்.
தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று யாஷ் ந்டித்த KGF-2 படம் ரிலீஸ் ஆகிறது. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்கி உள்ளது. இதே நாளில் அமீர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் ஷத்தா படமும் ரிலிசாகிறது. 1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்கிறார். அமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரிக்கிறார்.
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட குளியலறை செல்ஃபி! சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
இந்த படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, அதனை முன்னிட்டு முதல் லுக் POSTER வந்து நல்ல வரவேற்பை பெற்றது, இச்சமயத்தில் இந்த லால் சிங் ஷத்தா படத்தின் வெளியீட்டை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு படக்குழு ஒத்தி வைத்துவிட்டது, இதற்கான அறிவிப்பை லுக் POSTER வழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன் படி தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று இந்த படம் KGF-2 படத்துடன் ரிலீஸ் ஆகிறது.
வலிமை-க்கு பின் அஜித்குமார் - H வினோத் இணையும் #AK61 படத்தின் பக்கா மாஸ் புதிய அப்டேட்!
"லால் சிங் ஷத்தா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் படத்தின் வெளியீடு டிசம்பரில் இருந்து ஏப்ரலுக்கு மாறியதாகவும், தேதி மாற்றத்தை அறிவிப்பதற்கு முன்பே ‘கே.ஜி.எஃப் 2' படத்தின் குழுவினருக்கு என்னுடைய சூழலை விளக்கி, கடிதம் எழுதியிருந்தேன். ‘கே.ஜி.எஃப் 2' குழுவினரும் என்னுடைய கடிதத்தை ஏற்றுக்கொண்டு படத்தின் வெளியீட்டில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் நான் நெகிழ்ந்து போனேன்." என ஆமிர் கான் முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் நடிகர் ஆமிர் கான் பெருந்தன்மையுடன் ‘கே.ஜி.எஃப் 2' படத்தின் முக்கிய அங்கமான நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர் ஆகியோரிடம் தான் மன்னிப்பு கேட்டதாக நடிகர் ஆமிர் கான் அப்போது கூறி இருந்தார்.
தற்போது லால் சிங் சத்தா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என வதந்தி கிளம்பியது. இதனை மறுத்து ஆமீர் கான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "ஆமிர் கான் புரொடக்ஷன்ஸின் லால் சிங் சத்தாவின் வெளியீட்டுத் தேதி பைசாகி, 14 ஏப்ரல் 2022 என குறிப்பிடப்பட்டுள்ளது, சில வதந்திகளுக்கு எதிராக இதனை உறுதிசெய்கிறோம். இந்தப் படத்தைத் தயாரிக்கும் பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Viacom18 ஸ்டுடியோஸ் மற்றும் அமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரித்த, லால் சிங் சத்தாவை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார், ப்ரீதமின் இசையில் அமிதாப் பட்டாச்சார்யாவின் பாடல்கள் எழுதி உள்ளார். இந்த படத்தை Forrest Gump-ல் இருந்து அதுல் குல்கர்னி தழுவி எழுதியுள்ளார்". என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது