விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசனில், பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனியை காண அவரது தாயாரும், சகோதரியும் வருகை தந்தனர்.
அப்போது பாவனியிடம் அவரது சகோதரி பேசும்போது, “நீ அமீரை தம்பியா தான் பாக்குற.. ஆனா அவன், அவன் விளையாட்டை தான் விளையாடுகிறான். அப்படித்தான் வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு படுகிறது! பார்த்துக்கொள்” என கூறினார்.
அதன் பின்னர், அமீரிடமே பேசிய பாவனியின் சகோதரி, “நீங்கள் ஒரு டான்ஸர். வேறு என்ன சொல்வது.. புரிந்துகொள்வீர்களாக!” என மறைமுகமாக குறிப்பு தந்தார்.
அவர்கள் சென்ற பின், பாவனியிடம், “அம்மா என்ன சொன்னாங்க?” என கேட்ட அமீர் விஷயம் அறிந்ததும், “வர்றவங்கலாம் இதையே சொல்றாங்க! வேற எதுவுமே நான் பண்லயா... இத மட்டுமே பண்னிட்டு இருக்கேனோ?” என தோன்றுவதாய் கூறுகிறார். அதற்கு பாவனி, “இல்லை. இது பெரிதாய் தெரியுது.. அவ்வளவுதான்!” என சொல்கிறார்.
மேலும் அமீரிடம், “யார் என்ன சொன்னா என்ன?.. நான் மைண்ட்ல ஏத்திக்கிட்டேனா என்ன? அதன் செஞ்சாதான் உண்டு!” என சமாதானம் சொல்கிறார். பின்னர், அவரை அமீருடன் ஆடச் சொல்லி முதலில் தாமரை சொல்ல பின்னர், அமீருடன் மெல்லிய நடனம் புரிகிறார் பாவனி. ராஜூ இவர்களை டைரக்ட் செய்கிறார்.
அப்போது, ஆடிக்கொண்டே பாவனியிடம் அமீர் ப்ரொபோஸ் செய்கிறார், “ஐ எம் மேட்லி.. டீப்ளி இன் லவ் வித் யூ.” என்கிறார். அதற்கு பாவனியோ, “சீரியஸ்லி.. ஐ டோன் ஹேவ் எனி ஃபீலிங் ஆன் யு” என்கிறார். பின்னர் அமீர், “உனக்கு என்னை பிடிக்குமா?” என அமீர் கேட்க, “உன்ன ஃப்ரண்டா பிடிக்கும்.. ஆனா நீ சீரியஸா பேசுற.. என் பின்னாடி வந்தீன்னா ஒரு நாளைக்கு உனக்கே தெரியும்.” என்று சொல்ல, “நான் சீரியஸா சொன்னேன்னு யாரு சொன்னா?” என அமீர் சொல்கிறார்.
அதற்கு பாவனி, “ஆமா.. நீ எப்பவும் அப்படித்தானே சொல்லுவ?” என்று சொல்ல, இவர்களின் நடனம் முடிவுக்கு வருகிறது. இதையெய்யால் ஒரு டைரக்டர் போல சுற்றிச் சுற்றி டைரக்ஷன் செய்வது போல ஆக்ஷன் காட்டிக்கொண்டு இருக்கிறார் இதன் மூலம் ராஜூவின் டைரக்ஷனில் தான் பாவனியிடம் இப்படி பேசியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனினும் அமீர் பாவனியிடம் காதலை சொன்னது, அதை பாவனி மறுத்தது, பின்னர் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்தது உள்ளிட்டவற்றின் தொடர்ச்சியாகவே இவர்கள் பேசிக்கொண்ட வசனங்கள் இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
முன்னதாக பாவனியின் சகோதரியும் தாயாரும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், பிரியங்காவிடம் பேசிய பாவனி, “ராஜூவிடம் என்னிடம் இருந்து தள்ளி, தூரமாக இருக்க சொல்லி அமீர் சொல்லி இருக்கிறான் என்று என் சகோதரி கூறினார்.
ஆனால் எனக்கு அதை பற்றி எல்லாம் ஒன்றும் இல்லை. இவ்வளவு லவ் ஸ்டோரிகளை நான் பார்த்துவிட்டேன். இனி யாராவது லவ் சொன்னால் நான் சிரிப்பேன் அவ்வளவுதான். நாமெல்லாம் வேற ஜெனரெஷன்.!” என குறிப்பிட்டார்.