அமீர் நடிக்கும் புதிய படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் கைப்பற்றி உள்ளார்.
மெளனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த அமீர், ராம், பருத்திவீரன் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றார்.
பின்னர் யோகி, வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான வட சென்னை படங்களில் நடித்த அமீருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இவர் உயிர் தமிழுக்கு என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா இயக்கி தயாரிக்கிறார்.
அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அமீர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜயன் பாலா & பாலமுரளி வர்மன் வசனம் எழுதும் இப்படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாநாடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு முதலில் நாற்காலி என தலைப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது