Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

"நாம ஒண்ணா கதை பேசணும் அண்ணா!" - உருகிய நடிகர்.. 'எஸ்.பி.ஜனநாதனுக்கு என்ன ஆச்சு?' - அமீர் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் லாபம் திரைப்படத்தை இயக்கி வந்தவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

Ameer and Thirumurugan Over SP Jananathan எஸ்பி ஜனநாதன்

லாபம் திரைப்படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த இவர் உடல்நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவரது உடல்நிலை குறித்த விபரங்களை திரையுலக நடிகர்களும் இயக்குநர்கள் திரண்டு விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே இயக்குநர் அமீர், “மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கு, அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், களவாணி, ஈட்டி, பென்சில் உள்ளிட்ட படங்களி நடித்த நடிகர் திருமுருகன் தமது பேஸ்புக்கில்,  “முந்தின நாள் இரவு எங்களுடன் சாப்பிட்டு விட்டு சின்ன எடிட்டிங் வேலை இருக்கு போய் முடித்து விட்டு நாளை மதியம் உணவுக்கு வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இன்று நினைவற்று அசையாமல் கிடப்பதை நினைத்து பார்த்து நெஞ்சம் பதறுகிறது எழுந்து வா அண்ணா ஒன்றாக கதை பேசுவோம் உணவு  சாப்பிடுவோம் கடவுளிடம் பிராத்தித்து காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: பிரபல இயக்குநர் SP ஜனநாதன் ICU-வில் அனுமதி.. நேரில் சென்ற விஜய் சேதுபதி.. என்ன நடந்தது?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ameer and Thirumurugan Over SP Jananathan எஸ்பி ஜனநாதன்

People looking for online information on Ameer, Kalavani Thirumurugan, S P Jananathan will find this news story useful.