நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘மேயாத மான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ஆடை. வி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அமலா பால் லீட் ரோலில் காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமலா பாலின் தைரியமான முயற்சிக்கும், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்தன. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், ‘ஆடை’ படத்தில் திருத்தப்பட்ட, நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த சென்சார் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
அதில், ஆபாச வார்த்தைகள் வரும் இடங்களில் மியூட் செய்துள்ளது. ஆபாசம் கருதி, நேரடியாக படத்தில் இடம்பெறும் நிர்வாண காட்சிகளை ட்ரிம் மற்றும் டி-ஃபோக்கஸ் செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி ஜன்னல் அருகே காமினி நிர்வாணமாக நிற்கும் காட்சி நீக்கப்பட்டது. மாடியில் காமினி நிர்வாணமாக அமர்ந்திருக்கும் காட்சி நீக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிவலிங்கம் வரும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. லிங்கம் என்று வரும் வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சைட் போஸில் காமினி அமர்ந்திருக்கும் காட்சியும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.