அமலா பால் முதன்மை வேடத்தில் நடித்திருந்த 'ஆடை' படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ரத்னகுமார் இயக்கியிருந்த இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்திருந்தார்.
இதனையடுத்து அமலா பால் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதோ அந்த பறவை போல'. செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை வினோத் கே.ஆர். இயக்கயுள்ளார்.
இந்த படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பட விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், சினிமாவுக்கு சென்சார் தேவையில்லை. நம்ம வீட்டுக்குள்ள நம்ம பெர்மிசன் இல்லாம வருது பார்த்திங்களா தொலைக்காட்சி, அதுக்கு தான் சென்சார் தேவை. ஏன்னா ராத்திரி 8 மணி, 7 மணிக்குலாம் Condom விளம்பரம் வருது. குழந்தைகள் மனதை பாதிக்கக்கூடிய விளம்பரம்லாம் வருது'' என்று குறிப்பிட்டார்.