www.garudavega.com

குரங்கோடு செல்ஃபி எடுத்த அமலாபால்.. வெளிநாட்டில் SOLO டூர்.. செம்ம ட்ரெண்டிங் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலாபால், தனியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Amala Paul Poses with a monkey Indonesia Tour photos

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'துணிவு' படம் பார்த்த பிரபல முன்னாள் CSK வீரர்.. ஒரு வரியில் நச் Review!

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க ஒரு விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

Amala Paul Poses with a monkey Indonesia Tour photos

Images are subject to © copyright to their respective owners.

குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார். அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver, டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.

Amala Paul Poses with a monkey Indonesia Tour photos

Images are subject to © copyright to their respective owners.

நடிகை அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.  சமீபத்தில் அமலாபால்  தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக லண்டனில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள டவர் பாலத்தில் நின்று விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Amala Paul Poses with a monkey Indonesia Tour photos

Images are subject to © copyright to their respective owners.

நடிகை அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன்  'ஆடுஜீவிதம்', மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர், கைதி படத்தின் இந்தி ரீமேக் 'போலா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Amala Paul Poses with a monkey Indonesia Tour photos

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார். இந்நிலையில் நடிகை அமலாபால், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தோனேசியா நாட்டின் Ubud பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குரங்கு ஒன்றை அமலாபால் தனது மடியில் வைத்து இருப்பது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன. மேலும் குரங்குடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் அமலாபால் பகிர்ந்துள்ளார்.

Also Read | அக்கா நக்மாவுடன் தங்கை ஜோதிகா.. திருமண விழாவில் குழந்தைகளுடன் வைரல் போட்டோஸ்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul Poses with a monkey Indonesia Tour photos

People looking for online information on Amala Paul, Amala Paul Indonesia Tour Photos will find this news story useful.