நடிகை அமலாபால் மாலத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார்.
அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
தற்போது அமலாபால் மாலத்தீவு கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கடற்கரை தனக்கு தெரபி சிகிச்சை அளிக்கும் என்று அமலாபால் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அமலாபால் மாலத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சன் சியாம் இரு வெளி எனும் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். மாலத்தீவில் உள்ள தெற்கு அதோல் தீவின் அலுவிபுஷி பகுதியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த பீச் ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை மட்டும் 40,000 ரூபாய் முதல் 50,000 ருபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அலைகள் இல்லாத கடற்கரையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது கூடுதல் அம்சம். மாலி தீவில் இருந்து 145 கிமீ தொலைவில் இந்த அதோல் தீவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாலு விமான நிலையத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் அடுத்து அதோ அந்த பறவை போல போன்ற படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன் உருவாகி கொண்டிருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து வருகிறார்.