பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் ரவுண்டில் நாடியா வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆளாக அபிஷேக் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதன் பின்னர் அபிஷேக் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருக்கிறார்.
இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கும் அபிஷேக், பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை இது ஒரு மூளைக்கான விளையாட்டு என்பதை, தான் வெளியேவந்துதான் அறிந்து கொண்டதாகவும், குறிப்பிட்ட ஒரு சேனலில் உடல் வலிமைக்கான போட்டிகளை ரியாலிட்டி ஷோவாக நடத்தப்படுவதை பார்ப்பதாகும் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் டாஸ்குகளின்போது, அபிஷேக் அனைவரின் கேமையும் ஆக்கிரமிப்பதாக வரும் குற்றச்சாட்டு பற்றி ரவீந்தர் அபிஷேக்கிடம் கேள்விகளைக் கேட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த அபிஷேக், “பிக்பாஸ் வீட்டுக்குள் நான் முதல் ஒரு வாரத்திலேயே அனைவர் பற்றிய என்னுடைய கருத்தை கொடுத்து இருந்தேன். அதற்கு காரணம் ஒவ்வொருவரின் கதையையும் அவர்கள் ஸ்டேஜில் ஏறி கதை சொல்வதற்கு முன்பே நான் அறிந்திருந்தேன். அந்த அளவுக்கு அவர்களுடன் நான் நேரம் செலவிட்டு பேசி இருந்தேன். அதனால்தான் டாஸ்கின்போது நான் நடந்து கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் டாஸ்க் என்று வரும்போது என்னிடம் ஒரு சுவிட்ச் ஆன், ஆஃப் இருந்தது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
அதேசமயம் வெளியில் இருந்து பார்க்கும்போது, நான் டாஸ்கில் நடந்துகொண்டது அத்தனையும் புரோமோவாக வந்து இருந்ததை நண்பர்கள் கூறிய பின் அறிந்தேன். எனக்கு சினிமாவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. சினிமாவை பற்றி பேசுவதற்கு நான் வருண், சிபி, சில நேரங்களில் ராஜூ ஆகியோருடன் நேரம் செலவிடுவேன்.
ஆனால் பிரியங்கா, நான் சினிமாவை பற்றி பேசினால் தெறித்து ஓடி விடுவார். இது மாதிரியான விஷயங்களை வெளியில் பார்த்திருக்க முடியாது. நான் டாஸ்கின் போது நடந்து கொண்டது மட்டும்தான் ஷோவில் பார்த்ததாக நண்பர்கள் கூறி அறிந்தேன். நான் இன்னும் ஷோவை பார்க்கவில்லை.
மற்றபடி 11 வருடமாக ஸ்டார் விஜய்யை விரலை விட்டு ஆட்டி பிரபல விஜே உள்ளே இருக்கிறார், தாமரைச்செல்வி மதுரை வழக்கு மொழியில் பேசினாலே வேற லெவல், இமான் அண்ணாச்சி குழந்தைகளிடம் பேசுவதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர், சின்ன பொண்ணு அக்கா ஹை பிட்சில் பாடினால் மாஸ் எனவே யாருடைய கேமையும் நான் ஆக்கிரமிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
மேலும் தனது இயல்பு வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஓவர் கான்ஃபிடன்ட் போல் இருப்பது என்று சொன்னால் அது பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அபிஷேக். இந்த பேட்டியில் அபிஷேக் பேசியிருக்கும் பல்வேறு விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.