சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்ததை அடுத்து முதல் முறையாக ரசிகர்களோடு உரையாடியுள்ளார்.
பீஸ்ட் FDFS: ஒரு டிக்கெட் 1500 ரூபாயா? USA - ல வெளியான OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!
ரீல் to ரியல் ஜோடி…
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் நடிகை ஆல்யா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ். இந்த சீரியலின் போது காதல் வயப்பட்ட இருவரும் பின்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த சின்னத்திரை ரியல் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு ஆல்யா மானசா பிறகு ராஜா ராணி 2 என்ற சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
முதல் குழந்தை….
சஞ்சீவ்- ஆல்யா மானசா தம்பதிகளுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்யா மானசா குழந்தையின் அழகான புகைப்படம் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். நடிகர் சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலிலும், நடிகை ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' சீரியலிலும் பிசியாக நடித்து வந்தனர். இதற்கிடையே ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதை அறிவித்த போது ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்தனர். தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த அவர் சமீபத்தில் பிரசவத்துக்காக அந்த தொடரில் இருந்து விலகினார்.
இரண்டாவது குழந்தை…
இதையடுத்து சமீபத்தில் ஆல்யா மானசாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதை சமூகவலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளனர். பிறந்துள்ள குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் இந்த தமபதியினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வந்தனர்.
ரசிகர்களோடு உரையாடல்…
இந்நிலையில் பிரசவத்துக்கு பிறகு முதல் முறையாக ஆல்யா மானசா ரசிகர்களோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார். அதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் உங்கள் குழந்தைகளுக்கு பெயர்களை யார் முடிவு செய்தது என்று கேட்க ‘இரண்டு குழந்தைகளின் பெயரையும் என் கணவரே தேர்வு செய்தார்’ என்று கூறியுள்ளார். மற்றொருவர் ‘உங்கள் பிரசவம் சுகப்பிரசவமா? இல்லை சிசேரியனா?’ எனக் கேட்டிருந்தார். அதற்கு ‘அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தை பிறந்தது’ என ஆல்யா கூறியுள்ளார். இது சம்மந்தமான அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இப்போது கவனத்தை ஈர்த்து வருகின்றன.