அல்போன்ஸ் புத்ரன் 2013ஆம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் மலையாள ரசிகர்களின் விருப்பமான இயக்குநரானார்.
2 வருடங்கள் கழித்து வெளியான பிரேமம் (2015) தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவர் திரையுலகில் நுழைந்து 8 வருடங்களே ஆன நிலையிலும் அவர் இரண்டு படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலேயே பரவலான சினிமா ரசிகர்களின் விருப்ப இயக்குனராக உள்ளார்.
அல்போன்ஸ் புத்ரன் 2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் தனக்குப் பிடித்த 20 ஹாலிவுட் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் பகிர்ந்துள்ள இந்த முகநூல் பதிவு தற்போது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் The Good, The Bad and The Ugly, Roman Holiday, Ben-hur, 12 Angry Men, Schindler's List, Pulp Fiction, The Matrix, The Green Mile, Leon : The Professional, The Usual Suspects, Heat, The Godfather, A Beautiful Mind, Lock Stock and Two Smoking Barrels, No country for Old Men, The Big Lebowski, Terminator 2 : Judgement Day, Mad Max : Fury Road, Million Dollar Baby, Lucky Number Slevin ஆகிய 20 படங்களை டாப் 20 படங்களாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படங்கள் மிகச்சிறந்த பொழுது போக்கு படங்கள் என்றும் சினிமா கற்றுக்கொள்ள இந்த படங்கள் உதவும் என்றும் கூறியுள்ளார்.
அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முன்னதாக அல்போன்ஸ், ஃபஹத் ஃபாசிலுடன் பாட்டு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக பாட்டு படம் தள்ளிப்போகி உள்ளது. இந்த கோல்டு படத்தின் படப்பிடிப்பும் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக கேரள மாநிலத்திற்கு வெளியேவும் நடைபெற்றது.
அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என அறிவித்துள்ளார். முகநூலில் இந்த பதிவின் கீழ் ரசிகர் ஒருவர் பட ரிலீஸ் பற்றி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.